பழங்கள் சாப்பிடும்போது எமக்கு பல நன்மைகள் உண்டு ஆனால் சிலர் பழங்களை உண்பதால் பல பிரச்சனைகள் வருவதாக கருதுகின்றனர் ஆனால் அது நாம் உண்ணும் முறையிலேயே உள்ளது.
அதாவது சளி உள்ளபோது சாப்பிட்டால் கட்டாயம் சளி கூடி மூச்செடுக்கவே சிரமமாக இருக்கும் எனவே சளி உள்ளபோது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளிற்கு உண்டு. அதுமட்டுமா மஞ்சள் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
உள்ளி ஒரு சிறந்த மருத்துவ பொருள் என்பதில் சந்தேகமே இல்லை. இருதய நோய் ஏற்பட்டுவிடும் என்று பயமா? உள்ளியை தேனில்இட்டு சாப்பிட்டு வாருங்கள் அந்தப்பயமே தேவையில்லை.
உணவு சமிபாடு அடையாமல் அஜீரணப்பிரச்சனை ஏற்படும் சந்தர்ப்பத்தில் சிறிய துண்டு இஞ்சியை எடுத்து தோலை நன்றாக நீக்கி கழுவிய பின் அதனை இடித்து சாற்றை எடுத்து சூடான தேனீருடன் கலந்து அருந்தலாம்.
சிறிது நேரத்தில் அஜீரணப்பிரச்சனை நீங்கும்
(இஞ்சி பயன்படுத்தும் நாட்களில் மரவள்ளிக் கிழங்கு உணவுவகையை உண்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்)