தேவையான பொருட்கள்;
ஒரு கப் வறுத்த அரிசி மா
அரை கப் வறுத்த உழுத்தம் மா
ஒரு தேங்காயைப் பிழிந்தெடுத்த பால்
ஒரு கப் சீனி
ஒரு லீற்றர் எண்ணெய்
செய்முறை:
மெல்லிய சூடான தேங்காய்ப்பால் அரிசிமா, உழுத்தம்மா இரண்டையும் குழைத்து பதமாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை இலந்தப்பழ அளவிற்கு உருட்டி எண்ணையில் கலகலக்கப் பொரித்தெடுக்க. அதைப் பெரிய பாத்திரத்தில் பரவி வைத்து சீனியைக் காய்ச்சி அதன் மேல் ஊற்றினால் சீடை தயார்.
No comments:
Post a Comment