உருளைக்கிழங்கு பொடி மாஸ்
தேவையான பொருட்கள்:
உ.கிழங்கு-250g
உழுத்தம் பருப்பு-1 தே.கரண்டி
வெங்காயம் -100g
பச்சை மிளகாய்-3
கறிவேப்பிலை-சிறிதளவு
கடுகு-1தே.கரண்டி
உப்பு-தே.அளவு
எண்ணை-1/2 குழிக்கரண்டி
செய்முறை :
உ.கிழங்கை தண்ணீர் சேர்த்து வேகவைத்து பின் தோலுரித்து உதிர்த்து விட்டுஅதனுடன் உப்புத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாகவும் நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணை ஊற்றி உ.பருப்பு, கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வெங்காயம் வதங்கியதும் உதிர்த்து வைத்திருக்கும் உ.கிழங்கைப் போட்டு கிளறி இறக்கவும்.
(சமைக்கும் நேரம்-25நிமிடம்)
No comments:
Post a Comment