Tuesday, November 18, 2014
உருளைக்கிழங்கு பசளிக்கறி
தேவையான பொருட்கள்:
பசளிக்கீரை-200g
உ.கிழங்கு-500g
இஞ்சி
உள்ளி
மிளகாய்த்தூள்-1/2 தே.கரண்டி
பச்சை மிளகாய்-2
எண்ணை-2தே.கரண்டி
உப்பு-2தே.கரண்டி
செய்முறை:
உ.கிழங்கை தோலுரித்து நன்றாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணை விட்டு உ.கிழங்கு துண்டுகளைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
இஞ்சி, உள்ளி, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து பாத்திரத்தில் எண்ணை விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் பச்சை மிளகாயை முழுதாகப் போட்டு வதக்கவும்.
பன் அதில் நறுக்கி வைத்துள்ள கீரையைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் உ.கிழங்கு துண்டுகளை உப்பில் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
(சமைக்கும் நேரம்-25 நிமிடம்)
Labels:
veg
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment