Thursday, November 20, 2014

முட்டை குழம்பு

               முட்டை குழம்பு 
4 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள்

முட்டை-4                                                    
உருளை கிழங்கு - 500 கிராம்
சிறிதாக வெட்டிய வெங்காயம் -3 மே.க
சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 1மே.க
சிறிதாக வெட்டிய உள்ளி - 1 தே.க
சிறிதாக வெட்டிய கருவேப்பிலை- 1மே.க
கடுகு- 1 தே.க
வெந்தயம் - 1சிட்டிகை
தேங்காயெண்ணெய் - 2மே.க
தேங்காய் - 1
உப்பு - அளவிற்கு
கறிமிளகாய் துாள் - 1 மே.க
சிக்கன் கியூப் - 1 

செய்முறை


  • முட்டை மற்றும் உருளை கிழங்கினை அவித்து கோது தோல் என்பவற்றை நீக்கித் துப்பரவாக்கி முட்டைகளை இரண்டு சம பாதிகளாகவும் உருளை கிழங்கைப் பெரிய பெரிய துண்டுகளாகவம் வெட்டி வைத்துக்கெள்க 
  • தேங்காயை துருவி 3 தம்ளர் நீர் சேர்த்து பாலை பிழிந்து எடுக்க 
  • தாச்சியில் தேங்காயெண்ணெயைக் காய வைத்து காய்ந்த பின் கடுகைப் போட்டு வெடிக்க வைத்து வெண்காயம் பச்சைமிளகாய் உள்ளி கறிவேப்பிலை வெந்தயம் என்பவற்றை இட்டு வதங்கவிடவும்
  • வெண்காயம் அரைப்பதமாக வதங்கியவுடன் துாள் முட்டை உருளை கிழங்கு என்பவற்றை கொட்டி நன்கு கிளறி சேர்த்தக் கொண்ட பின்பு சிக்கன் கியூப் பிழிந்து வைத்துள்ள பால் அளவிற்கு உப்பு என்பவற்றை இட்டுச் சேர்த்துக் குழம்பு நன்றாக பொங்கி கொதித்து ஓரளவு தடிக்க தொடங்கியதும் இறக்கித் தேசிப்புளி கலந்து பரிமாறலாம். 

No comments:

Post a Comment