புதினா சாதம்
தேவையான பொருட்கள்
- வடித்த சாதம்- 1/2கப்
- புதினா இலை-1/4 கப்
- கடலைப்பருப்பு-1தேக்கரண்டி
- தனியா-1/2தேக்கரண்டி
- பச்சைமிளகாய்-1
- கராம்பு-2
- தேங்காய்துருவல்-1தேக்கரண்டி
- உப்பு-தேவையான அளவு
- எண்ணெய்-3தேக்கரண்டி
- கடுகு-1/4 தேக்கரண்டி
- வேர்க்கடலை-1தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு-1தேக்கரண்டி
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடலைபருப்பு,கராம்பு,தனியா,பச்சைமிளகாய்,தேங்காய்துருவல்
சேர்த்து பொன்னிறமாகும் வரை வதககைவும். அடுப்பை அணைத்து விட்டு புதினா இலைகளை சேர்த்து அந்தச் சூட்டிலேயேவதக்கவும்.ஆறியவுடன் தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.இதை சாதத்தில் சேர்க்கவும்.பின்னர் உப்பு சேர்க்கவும்.பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,வேர்க்கடலை,உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து சாதக்கலவையில் சேர்க்கவும்.
No comments:
Post a Comment