நண்டுக்கறி
தேவையான பொருட்கள்
நண்டு - 4 பெரியது
தேங்காய்-1
வெங்காயம் - 100 கிராம்
உள்ளி - 4 பல்லு
இஞ்சி - 15 கிராம்
வெந்தயம் - 1 தே.க
கடுகு - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 நெட்டு
ரம்பை - 2 துண்டு
தேங்காயெண்ணெய் - 3 மே.க
உப்பு - அளவிற்கு
தேசிப்புளி -அளவிற்கு
மாசாலாத்துாள் - 1 தே.க
கறிமிளகாய்துாள் - 3 மே.க
மாசாலாத்துாள் - 1 தே.க
கறிமிளகாய்துாள் - 3 மே.க
செய்முறை
- நண்டை பாத்திரத்தில் இட்டு நன்கு பொங்கி கொதித்த நீரை ஊற்றி சிறிது நேரம் வைத்துக் கொண்ட பின் நண்டின் குரைக்கால்கள் இருக்க கூடியதாக அதன் மேற்புற ஓட்டுப்பகதியையும் அடிப்புறமுள்ள சிறிய முக்கோண வடிவ ஓட்டுப்பகுதியையும் நீக்கி விட்டு இரண்டு சம பகுதிகளாக வரும் வண்ணம் வெட்டி நன்றாக கழுவி எடுத்துக்கொள்க
- பின்பு உள்ளி இஞ்சி என்பவற்றை பசுந்தையாக அரைத்தக்கொள்க
- வெங்காயம் பச்சைமிளகாய் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்க
- தேங்காயை துருவி ஒரு பிடி துருவலை தனியாக எடுத்து வைத்து கொண்டு மிகுதி தேங்காய்துருவலிற்கு சிறிது சிறிதாக நீரை சேர்த்து 2 தம்ளர் முதற் பாலை பிழிந்து எடுக்க
- எடுத்துவைத்துள்ள தேங்காய்துருவலை பொன்னிறமாக வறுத்து மெதுவாக அரைத்த வைத்துக்கொள்க
- தாச்சியில் எண்ணெயை விட்டு காய்ந்த பின்பு கடுகை போட்டு வெடிக்க வைத்து வெட்டிய வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை ரம்பை வெந்தயம் என்பவற்றை வதங்க விட்டு அரைப்பதமாக வதங்கியவுடன் அரைத்த கூட்டு கறிமிளகாய்துாள் நண்டு என்பவற்றை இட்டு நன்கு கிளறிச்சேர்த்துக்கொண்ட பின்பு மூடி வதங்க விடவும் .
- நன்கு வதங்கிய பின்பு மீண்டும் நன்கு கிளறி உப்பு முதற்பால் என்பவற்றை இட்டு சேர்த்து மெல்லிய நெருப்பில்மூடி அவிய விட்டு பால் வற்றி திரளத்தொடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய்துருவல் மாசாலாத்துாள் என்பவற்றை இட்டு நன்கு கிளறிச்சேர்த்து இறக்கித் தேசிப்புளி அளவிற்கு விட்டு கலந்து பரிமாறவும்.
No comments:
Post a Comment