கார முறுக்கு
தேவையான பொருட்கள்:
அரிசி மா:1/2 பேணிகடலை மா:1. 1/4 பேணி
மிளகாய்ப்பொடி:1/2 மே.கரண்டி
சீரகப்பொடி:1/2 தே.கரண்டி
எண்ணை:1மே.கரண்டி
எள்:1தே.கரண்டி
பொரிக்க எண்ணை
உப்பு
பொரிக்கும் எண்ணை, உப்பு தவிர்ந்த அனைத்தையும் நன்கு கலந்து தேவைக்கேற்ப உப்பு, நீர் சேர்த்து மாவை நன்கு பிசைந்து மென்மையாக்கவும்.
தாய்ச்சியில் எண்ணை விட்டு கொதித்ததும் முறுக்கு அச்சு உள்ள உரலில் மாவை இட்டு முறுக்குகளாக பிழிந்து கரகரப்பான பதம் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
(உப்பு, மிளகாய்ப்பொடி ருசியின் தேவைக்கேற்ப கூட்டிக் குறைக்கலாம்)
No comments:
Post a Comment