Saturday, November 22, 2014

கடலைப்பருப்பு லட்டு

கடலைப்பருப்பு லட்டு

படம் - நீலவேணி சமையல் அறையிடமிருந்து

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு:2பேணி
சீனி:1பேணி
பட்டர்:400g

ஏலக்காய்
எண்ணை(பொரிக்க)

செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை தண்ணீரில் நன்கு ஊறவைக்கவும்.
ஊறிய பின் தண்ணீரை நீக்கி எண்ணையில் கலகலக்கப் பொரியுங்கள்.
பொரித்தெடுத்த கடலைப்பருப்பை நன்கு ஆறவிட்டு அரையுங்கள்.
சீனயையும் மாப்போல நன்கு அரையுங்கள்.
அரைத்த கடலைப்பருப்பு, சீனி இரண்டையும் கலந்து அதனுடன் ஏலக்காயை பொடியாக்கி கலக்கவும்.
பின் பட்டரை உருக்கி கலந்து வைத்தள்ள சேர்வையையும் சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடியுங்கள்.
இதோ உங்கள் கடலைப்பருப்பு லட்டு தயார்!!!

No comments:

Post a Comment