நண்டு ரசம்
தேவையான பெருட்கள்
- நண்டு-1/2கிலோ
- பெரிய வெங்காயம்-2
- சின்ன வெங்காயம்-100கிராம்
- தக்காளி-3
- இஞ்சி,வெ.பூண்டு விழுது-1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய்-2
- மிளகுத் துாள் -1 தேக்கரண்டி
- சீரகத் துாள்-1 தேக்கரண்டி
- மிளகாய் துாள்-1 தேக்கரண்டி
- தேங்காய் துருவல்-4 தேக்கரண்டி
- மஞ்சள் துாள்- சிறிது
- சீரகம்-1 தேக்கரண்டி
- எண்ணெய்- சிறிதளவு
- உப்பு- தேவையா அளவு
- கறிவேப்பிலை,கொத்தமல்லி- கைபிடி அளவு
செய்முறை
நண்டை உடைத்து நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கெள்ளவும். பெரிய வெங்காயம்,2 தக்காளி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்க. பின் சின்ன வெங்காயம்,1 தக்காளி,தேங்காய் துருவல் போன்றவற்றை மைபோல் மழமழப்பாக அரைத்துக் கொள்க. பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி,கடுகு,உளுந்து,சீரகம் சோத்து தாளிக்கவும்.வெங்காயத்தை போட்டு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு கூழாகும்வரை வதக்கவும்.பின் மிளகுத் துாள்,சீரகத் துாள்,மஞ்சள் துாள் போட்டு கிளறவும்.பி்ன் நண்டை சேத்து நண்டு மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் கறிவேப்பிலை,கொத்தமல்லி துாவி இறக்கவும்.
No comments:
Post a Comment