Sunday, November 23, 2014

மசாலா இடியப்பம்



மசாலா இடியப்பம்

தேவையான பொருட்கள்


  • இடியப்பம்-1கப்
  • வெங்காயம்-1(பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி,வெள்ளைபூண்டுபேஸ்ட்-1தேக்கரண்டி
  • தக்காளி-1(நறுக்கியது)
  • புதினா-சிறிது
  • மஞ்சள் துாள்-1 சிட்டிகை
  • மிளகாய் துாள்-1/2தேக்கரண்டி
  • கரம் மசாலா-1/2தேக்கரண்டி
  • கொத்தமல்லி-சிறிது
  • உப்பு-தேவையா அளவு
  • எண்ணெய்-2தேக்கரண்டி
  • பெ.சீரகம்-1/2தேக்கரண்டி
  • க.பட்டை-1/4இ்ன்ச்
  • கறிவேப்பிலை-சிறிது

செய்முறை

முதலில் இடியப்பம் செய்து அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து குளிர வைக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெ.சீரகம்,க.பட்டை,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பி்ன் அதில் இஞ்சி,வெள்ளைபூண்டுபேஸ்ட்,வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி பின் தக்காளி,புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்குக. பின் அதனுடன் மஞ்சள் துாள்,மிளகாய் துாள்,கரம் மசாலா தேவையா அளவு உப்பு சேர்த்து வதக்குக. இறுதியாக அதில் இடியப்பத்தை சேர்த்து வதக்கி கொத்தமல்லி யை துாவினால் மசாலா இடியப்பம் ரெடி.

No comments:

Post a Comment