Sunday, November 23, 2014

பருப்பு பாயாசம்



பருப்பு பாயாசம்

தேவையான பெருட்கள்

  • பயறு – 1/2 கப்
  • வெல்லம்  தேவைக்கேற்ப‌
  • திராட்சை   சிறிதளவு
  • முந்திரி  சிறிதளவு
  • பால் –  1/2 கப்
  • ஏலக்காய் - 3
  • குங்குமப்பூ - 10 இதழ்கள்
  • நெய்  தேவையான அளவு

செய்முறை

பயறை வறுத்து நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் பருப்பை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும், நன்றாக வெந்ததும் கரண்டியால் மசித்து கொள்ளவும். பின்பு இதில் சர்க்கரையை பொடியாக்கி  போட்டு கிளறி சிறிது நேரம் கழித்து பாலை ஊற்றி கொதித்ததும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். பிரிதொரு சட்டியில் நெய் விட்டு திராட்சை, முந்திரியை பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். சுவையான பருப்பு பாயசம் தயார். இப்பாயாசத்தில் தாதுப்பொருள், நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எளிதில் ஜீரணமாகும், மேலும் வயிற்று கோளாறுகளை குறைக்கும், உடல் வெப்பத்தை தணிக்கும் உணவாகும்.

No comments:

Post a Comment