மஸ்கற்
தேவையான பொருட்கள்:
கோதுமை மா-1பேணி
சீனி-1 1/2 பேணி
நெய்-சிறிதளவு
கஜூ
Colouring(orange)
தண்ணீர்-1 பேணி
செய்முறை:
மாவை றொட்டிக்குக் குழைப்பதுபோல் நன்கு குழைத்து தண்ணீரை சிறிது சிறிதாக விட்டுக் கலந்து கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மிதந்து மாக்கலவை பாத்திரத்தின் அடியில் பால் போன்று படிந்திருக்கும் நிலை வந்த பின் தண்ணீரை ஊற்றி விட்டு மாவை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்.
பின் சிறு துளித் துளியாக colouring ஐ சேர்க்க.
தற்போது சீனியைக் காய்ச்சி தயாராக்குங்கள். சீனி உருகி வந்த பின் மாக்கலவையை அதில் போட்டு கரண்டியால் கிண்டத்தொடங்குங்கள்.
பதார்த்தம் தாய்ச்சியில் ஒட்டாதிரிக்கும் வண்ணம் இடக்கிடையே நெய் விட்டு பதம் வரும் வரை கிளறுங்கள்.
பதமாகியதும் நறுக்கிய கஜூ சேர்த்து தட்டைப் பாத்திரத்தில் பரப்பி ஆறியதும் விரும்பிய வடிவில் வெட்டினால் மஸ்கற் தயார்.
No comments:
Post a Comment