Sunday, November 23, 2014

மீன் குழம்பு

மீன் குழம்பு

தேவையா பொருட்கள்

  • விரால் மீன் 500 கிராம்
  • சின்ன வெங்காயம் 100கிராம்
  • தக்காளி 150 கிராம்
  • வெள்ளை பூண்டு 50கிராம்
  • மிளகாய் 10
  • கொத்தமல்லி 1 குழிக் கரண்டி
  • வெந்தயம் 2 தேக்கரண்டி
  • மஞ்சள் துாள் 1/4தேக்கரண்டி
  • பெ.சீரகம் 1 தேக்கரண்டி
  • சீரகம் 2 தேக்கரண்டி
  • மிளகு  1/4 தேக்கரண்டி
  • புளி சிறிதளவு
  • எண்ணெய் தேவையானளவு
  • உப்பு தேவையானளவு
  • கறிவேப்பிலை சறிது

செய்முறை

சின்ன வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.வெள்ளை பூண்டை தட்டி வைக்கவும்.தாச்சியில் எண்ணெய்விட்டு சீரகம்,மிளகு,கொத்தமல்லி,மிளகாய்வெள்ளை பூண்டு, பெ.சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டிவைக்கவும்.தாச்சியில் 100மில்லி  எண்ணெய்விட்டு காய்ந்ததும் வெந்தயம், மிளகு , கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயத்தை கொட்டி சிறிது உப்பு சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவை கலந்து வதக்கி புளி நீரை விட்டு  தேவையானளவு தண்ணீர் விட்டு 15 நிமிடம் கொதிகிக விடவும்.பின் மீன் துண்டுகளை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.

No comments:

Post a Comment