பட்டர் கேக்
photo by - buttercakes from google free photo |
தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 கிராம்சீனி - 500 கிராம்
மாஜரீன் - 500 கிராம்
முட்டை- 10
பேக்கிங் பவுடர் - 2 தே.க
வனிலா -1 மே.க
பனானா எசன்ஸ் - 3துளிகள்
பிளம்ஸ் - 50 கிராம்
கஜீ - 50 கிராம்
செய்முறை
- சீனியை கிறைண்டரிலிட்டு அரைத்து கொள்க
- மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 5 முறை அரித்து வைத்து கொள்க
- மாஜரீனை பெரிய பாத்திரத்தில் போட்டு சீனியையும் சேர்த்து ஒரே பக்கமாக சீனி கரையும் வரை நன்றாக அடிக்க.
- முட்டை களை வேறோர் பாத்திரத்தில் உடைத்துவிட்டு வனிலாவும் சேர்த்து நன்கு நுரை பொங்கும் வண்ணம் முடடை அடி கருவியால்(beater) அடித்து கொள்க.
- பின்பு மாஜரீன் கலவையில் முட்டையை அடித்து வரும் நுரையை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு முழுவதுமாக சேர்த்து நன்றாக அடித்து கொள்க.
- பின்பு அடித்துவைத்துள்ள கலவையில் கோதுமை மாவை சிறிது சிறிதாக துாவி ஒரே பக்கமாக சேர்த்து கலந்து பனானா எசன்ஸையும் கஜீ பிளம்ஸையும் சேர்த்து கொள்க.
- கேக் தட்டிற்கு ஒயில் பேப்பரை பரவி சிறிதளவு மாஜரீன் தடவிக்கொண்டு கேக் கலவையை ஊற்றி பேக் செய்து கொள்க.
பேக் செய்ததும் அனைவரும் விரும்பும் சுவையான பட்டர் கேக் தயார். நீங்கள் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறி கொள்ளலாம்.
No comments:
Post a Comment