- பிஸ்ஸா(pizza)
தேவையான பொருட்கள்
கோதுமை மா - 1சுண்டு நிரப்பி
ஈஸ்ட் - 1 சிட்டிகை
முட்டை - 2
மாஜரீன் - 2மே.க
சீஸ் - 250 கிராம்
தக்காளி சோஸ் - 4 மே.க
பெரிய வெங்காயம் - 1
கோவா - 50 கிராம்
கரட் - 100 கிராம்
லீக்ஸ் - 100 கிராம்
உப்பு - அளவிற்கு
மிளகுதுாள் -அளவிற்கு
கோழி இறைச்சி அல்லது இறால் - 500 கிராம்
சில்லி சோஸ் - 1 தே.க
கோதுமை மா - 1மே.க பலகைக்கு பூசுவதற்கு
தக்காளி - 1
செய்முறை
ஈஸ்ட் - 1 சிட்டிகை
முட்டை - 2
மாஜரீன் - 2மே.க
சீஸ் - 250 கிராம்
தக்காளி சோஸ் - 4 மே.க
பெரிய வெங்காயம் - 1
கோவா - 50 கிராம்
கரட் - 100 கிராம்
லீக்ஸ் - 100 கிராம்
உப்பு - அளவிற்கு
மிளகுதுாள் -அளவிற்கு
கோழி இறைச்சி அல்லது இறால் - 500 கிராம்
சில்லி சோஸ் - 1 தே.க
கோதுமை மா - 1மே.க பலகைக்கு பூசுவதற்கு
தக்காளி - 1
செய்முறை
- கோதுமைமாவை அரித்து பாத்திரத்தில் இட்டு அளவிற்கு உப்பு துாள் ஈஸ்ட் மாஜரீன் என்பவற்றையிட்டு நன்கு பிசிறிசேர்த்த பின் முட்டைகளை உடைத்துவிட்டு நன்றாக பிசைந்து அளவிற்கு தண்ணீர் விட்டு பற்றீஸ் மா பதத்திற்கு குழைத்து 8 மணிநேரத்திற்கு ஊறவைத்து கொள்க.
- மரக்கறி வகைகள் வெங்காயம் என்பவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கழுவி ஒரு துளி நீர் கூட இல்லாமல் வடியவிட்டு எடுத்து உப்புதுாள் மிளகுதுாள் என்பவற்றை அளவிற்கு சேர்த்து கலந்து வைத்து கொள்க.
- இறைச்சி இறால் என்பவற்றை துப்பரவு செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்புத்துாள் இட்டு அவித்தெடுக்குக.பின் சிலிசோஸ் இட்டு கலந்து வைக்குக.
- சீஸ்ஸை ஸ்கிறேப்பரில் துருவி எடுக்குக.
- குழைத்த மாகலவையை 4 சம பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக்கி ஒவ்வொரு உருண்டையையும் மா பூசிய பலகையில் வைத்து 1/ 8 அங்குலத்தடிப்பான தோசையளவு பருமனுள்ள வட்டமாக உருட்டியெடுத்து எண்ணை பூசிய கேக்தட்டில்வைத்து ஒவ்வொன்றிற்கும் தக்காளிசோஸை பரவலாக பூசி அதன்மேல் மரக்கறிவகைகளை ஒருபடை பரவி அதன் மேல் இறால் இறைச்சி என்பவற்றை பரவி மேலே சீஸ் துாளை மரக்கறி வகைகள் மறையும் படி பரவி அவணில் பேக்செய்து எடுக்குக.
( சீஸ்துாள் அதிகமாகப் பாவிப்பதைப் பொறுத்து சுவை அதிகமாக இருக்கும்)
No comments:
Post a Comment