Friday, January 16, 2015

பீற்றூட் சூப்

பீற்றூட் சூப்


தேவையான பொருட்கள்: 

பீற்றூட் துருவல்: 2கப்
கரட் துருவல்: 1கப்
எண்ணை:2 மே.கரண்டி
நறுக்கிய உள்ளி: 4பல்
நறுக்கிய வெங்காயம்:2

வறுத்து பொடியாக்கிய சீரகம்:2 தே.கரண்டி
சோஸ்:2மே.கரண்டி
தேவையான அளவு உப்பு,மிளகு தூள்

செய்முறை:

ஓர் பாத்திரத்தில் எண்ணையை சூடாக்கி நறுக்கிய உள்ளி, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் துருவிய பீற்றூட், கரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் ஆறவைத்து வடிகட்டி மிளகுதூள், உப்பு, சோஸ் சேர்த்தால் பீற்றூட் சூப் தயார்...

No comments:

Post a Comment